பூக்கள் விலை தொடர்ந்து வீழ்ச்சி

தினகரன்  தினகரன்
பூக்கள் விலை தொடர்ந்து வீழ்ச்சி

ஆரல்வாய்மொழி : குமரிமாவட்டம் தோவாளையில் உள்ள பூச்சந்தைக்கு ஒரு மாதமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கடைசி முகூர்த்த நாள் என்பதால் நேற்று முன்தினம் பூக்கள் விலை அதிகரித்தது. நேற்று விலை சரிந்து காணப்பட்டது.நேற்று மல்லிகை பூ கிலோ ரூ250க்கும், பிச்சி மற்றும் முல்லை தலா ரூ150, தோவாளை அரளி ரூ100, சேலம் அரளி ரூ90, வாடாமல்லி ரூ20, சம்மங்கி ரூ25, கனகாமரம் ரூ400, பாக்கெட் ரோஸ் ரூ10, பட்டன்ரோஸ் ரூ70, கொழுந்து மற்றும் மரிக்கொழுந்து தலா ரூ80, மஞ்சகேந்தி ரூ20, ஆரஞ்சி கேந்தி ரூ30, தாமரை ரூ1, துளசி ரூ15, கோழிப்பூ ரூ30க்கும் விற்பனையானது. பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், பூக்கள் விலை சரிவு ஆவணி மாதம் வரும்  ஓணப்பண்டிகை வரை நீடிக்கும். ஓணம் தொடங்கிய பின்னரே விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

மூலக்கதை