ஜப்பான் மழையில் 88 பேர் உயிரிழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பான் மழையில் 88 பேர் உயிரிழப்பு

குராஷிகி: ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்வதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.   தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 88 பேர் உயிரிழந்து உள்ளனர்,  58 பேரை காணவில்லை.   வெள்ளத்தில் வீடுகள் பல அடித்து  போய்விட்டன.   இதுவரை, மழையில் சிக்கிய 2,310 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண்  மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.

ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு  பணியாளர்கள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் சாலைகள் மூடப்பட்டு  உள்ளன.   சில பகுதிகளில் ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

.

மூலக்கதை