வட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்விழா வரும் சூன் 29,30 மற்றும் சூலை 1 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் பிரிஸ்கோ நகரில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து மரபுக் கலை, இலக்கியம், தமிழிசை, தொழில் அதிபர்கள், சினிமா துறை ஆகியவற்றிலிருந்து பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த ஆண்டின் பேரவை விழாவில் மரபு –மகளிர்-மழலை என்ற கருத்தையொட்டி நடத்தப்பட இருக்கிறது. மேலும் “செந்தமிழ் இருக்கை செய்வோம்-செம்மொழி சிறக்கச் செய்வோம்” என்ற முழக்கத்துடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைந்த வெற்றி கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் சிறப்பானவர்களை நினைவு கூர்ந்து போற்றும் நடைமுறையையொட்டி இவ்வாண்டு இரும்பு மங்கை தில்லையாடி வள்ளியம்மை மற்றும் தந்தை செல்வா ஆகியோரின் 120 ஆண்டு நினைவாகவும் கொண்டாடப்படவிருக்கிறது. அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலிருந்தும், வட அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் குடும்பமாக ஒன்றுகூடும் மிகப்பெரிய திருவிழாவாகும். பல மாகாணங்களிலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விமானங்களில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. அரங்கத்தை சுற்றியுள்ள நகரங்கள் அனைத்திலும் விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டு நட்பு பாராட்டி, தமிழ் கலை-இலக்கியம்-மரபு உள்ளிட்டவற்றை போற்றி பெருமைப்படும் நிகழ்வாக இது அமையவிருப்பதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு.கால்டுவெல் வேலுநம்பி தெரிவித்தார்.

மூலக்கதை