வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.

சூன் 16, 2018 சனிக்கிழமை அன்று வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்து இந்த கிளையைத் தொடங்கிவைத்து “உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தேவையும் நோக்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியை நியூசெர்சியை சார்ந்த முனைவர் நா.க.நிதி அவர்கள் ஒருங்கிணைத்தார். நியூசெர்சி கிளையை தொடக்கமாகக் கொண்டு மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்தி தமிழ்மக்கள் தொல்காப்பியக் கருத்துகளை உள்வாங்க திட்டமிடுவது குறித்து எடுத்துரைத்தார். இந்த தொடக்கவிழா சிறப்பாக அமைய வாழ்த்து செய்தி அனுப்பிய பேரூர் அடிகளாரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முனைவர்.மு.இளங்கோவன் இயக்கத்தில் வெளிவந்த “விபுலாநந்த அடிகளார்” ஆவணப்படம் திரையிடப்பட்டது

மூலக்கதை