பெட்ரோல் விலையை சமாளிக்க சூரிய சக்தியில் இயங்கும் புதிய கார்: கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

தினகரன்  தினகரன்
பெட்ரோல் விலையை சமாளிக்க சூரிய சக்தியில் இயங்கும் புதிய கார்: கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

சென்னை: சூரிய சக்தியில் இயங்கும் புதிய காரை சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை கார் மூலம் பெட்ரோல் விலையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை வணிகப்படுத்தினால் அதிக அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற கார்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு லட்சம் முதல் ஒன்றை லட்சம் வரை விற்பனை செய்யப்படும் இந்த கார் 40 கி.மீ. தூரத்தில் செல்லக்கூடியது. ஆனால் ஒருவர் மட்டுமே இந்த காரில் பயணிக்க முடியும். சோலாரில் 4 மணிநேரம் சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 150 முதல் 200 கி.மீ வரை செல்ல கூடியதாகும். இதேபோல் காடு, மலைகள் கரடுமுரடான இடங்களில் பயன்படுத்தக் கூடிய காரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாகசம் மற்றும் மலையேறும் வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை