குழந்தையை அறைந்த பாதிரியார்! - இணையத்தில் பரவிய காணொளியால் பதவியிழப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL

கிருஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றை கன்னத்தில் அறைந்த கட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 
 
கடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட அந்த 40 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது. குறித்த  குழந்தைக்கு ஞானஸ்தானம் வழங்கும்போது, அது அழுதுகொண்டுள்ளது. அதனை பாதிரியார் சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழ, பாதிரியார் குழந்தையின்  கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இந்த காட்சி காணொளியாக தொலைபேசியில் பதிவாகப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 
 
இதனால், குறித்த 89 வயதுடைய பாதிரியாரை திருமண நிகழ்வுகளிலோ, ஞானஸ்நானம் செய்யும் நிகழ்வுகளிலோ ஈடுபடக்கூடாது என Champeaux ( Seine-et-Marne )ஐச் diocese of Meaux தடை விதித்துள்ளது. தவிர, இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

மூலக்கதை