விண்ணில் இருந்து பூமியை தாக்க வரும் எரிகற்களைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்

தினகரன்  தினகரன்
விண்ணில் இருந்து பூமியை தாக்க வரும் எரிகற்களைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்

நியூயார்க்: விண்ணில் இருந்து பூமியை தாக்க வரும் எரிகற்களை கண்டறிந்து தடுக்கும் முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 66 ஆடி நீளம் உள்ள எரிகல் ஒன்று ரஷ்யாவின் ஒரு பகுதியை தாக்கியது. அதனால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம் அடைந்தன. மேலும் பலர் காயம் அடைந்தனர். இதே போல் பூமியை நோக்கி வரும் எரிகற்களை தடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணில் இருந்து வரும் எரிகற்களை கண்டறிந்து பூமியை நோக்கி வராமல் வேறு திசையில் திருப்பி விடும் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எரிகற்களை தடுத்து திசை திருப்பும் நடவடிக்கையில் அமெரிக்காவின் ராணுவம் மற்றும் அவசர நடவடிக்கை குழுவுடன் நாசாவும் இணைந்து பணியாற்றும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை