காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதை அடுத்து கர்நாடக முதல்வர் இன்று சட்டநிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தினகரன்  தினகரன்
காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதை அடுத்து கர்நாடக முதல்வர் இன்று சட்டநிபுணர்களுடன் அவசர ஆலோசனை

பெங்களூரு: காவிரி பிரச்சினையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். காவிரி நிதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹூசைன் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதே போன்று உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி ஒழுங்காற்று குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 உறுப்பினர்களின் பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கர்நாடகா தவிர்த்து மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவித்துள்ளன. கர்நாடக நீர்வள செயலாளர், காவிரி ஆணைய பகுதி நேர உறுப்பினராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது குறித்து பெங்களூருவில் இன்று விவாதிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், மற்றும் சட்ட நிபுணர்களுடன் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மூலக்கதை