2019 மக்களவை தேர்தலில் வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜ முயற்சி? மம்தா பானர்ஜி எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
2019 மக்களவை தேர்தலில் வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜ முயற்சி? மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மின்னணு வாக்கு எந்திரத்தில் பாஜவினர் இதற்கு முன் முறைகேடு செய்து இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் பல்வேறு முறைகேடுகள் செய்யலாம்.

மகேஷ்டோலா இடைத்தேர்தலில் 30 வாக்கு இயந்திரங்கள் திடீரென பழுதாகி நின்றன. அதேபோல, எதிர்காலத்திலும் வாக்கு எந்திரத்திலும் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜ முயலலாம்.

ஆதலால், நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் பாஜவைப் போல் தீவிரவாதக் கட்சி அல்ல. பாஜவினர் அகங்காரம் பிடித்தவர்கள், சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்.

மதவெறி பிடித்தவர்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என மாற்று மதத்தினரைப் பிடிக்காது.



உயர் சாதி, தாழ்ந்த சாதி என பாகுபாடு காட்டி நடத்துவார்கள். அவர்ளுக்கு ஏற்றார்போல் நடக்காவிட்டால், என்கவுன்ட்டர் செய்துவிடுவதாக மிரட்டுவார்கள்.

ஏனென்றால் ஆட்சியில் இருப்பதால், அவ்வாறு பேசுகிறார்கள். நான் சவால் விடுகிறேன், நம்மை அவர்கள் சீண்டிப் பார்க்கட்டும், நாம் யார் என்பதைக் காட்டுவோம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்க்கிறது, இதனால், பாஜவினர் எளிதாக தங்களின் வாக்கு வங்கியை அதிகரித்து, மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துவிடுகிறார்கள்.

மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்வது பாஜவினருக்குப் பழக்கமாகிவிட்டது. நாம்தான் வரும் தேர்தலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பாஜ அளிக்கும் பணத்துக்கு நம் தலைவர்கள் பலியாகிவிடக்கூடாது, பணத்துக்காக நாம் பணியாற்றக்கூடாது. ’’  இவ்வாறு மம்தா  பேசினார்.

.

மூலக்கதை