அமெரிக்க பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு மத்திய அரசு அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்கவரியை அதிரடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவை தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்க வரியை அமெரிக்கா பலமடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருமானம் குறையும்.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்கவரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், சில வகை மீன்களுக்கு 15 சதவீதமும் சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரும்பு, எக்கு பொருட்கள், முத்துக்கள், ஆப்பிள்கள் ஆகியவற்றின் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை