இன்று 33 வது நாள் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று 33 வது நாள் பணி பகிஷ்கரிப்பு!  போக்குவரத்து தடை!!

இன்று வெள்ளிக்கிழமை ஜூன் 22 ஆம் திகதி தொடரூந்து தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து தடைப்பட உள்ளது. 
 
33 வது நாள் பணி பகிஷ்கரிப்பை இன்று முன்னெடுத்துள்ளனர். இல்-து-பிரான்சுக்குள்  RER A வழமை போல இயங்கும் எனவும், RER B Nord இரண்டில் ஒன்றும், RER B Sud மூன்றில் இரண்டும் இயங்கும். RER C மற்றும் RER D Nord, Sud ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்றும், RER E நான்கில் மூன்றும் இயங்கும். 
 
Transilians சேவைகளில், R வழி சேவை நான்கில் ஒன்று மட்டுமே இயங்கும் எனவும், H, J, K, L, N, P ஆகிய வழி சேவைகள் இரண்டில் ஒன்று எனும் கணக்கிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
TGVக்கள் மற்றும் சர்வதேச சேவைகளில் பாதிப்புக்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை