பரிஸ் - உயிரை பணயம் வைத்து - பேரூந்தின் போனட் பகுதிக்குள் ஒளிந்திருந்த அகதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  உயிரை பணயம் வைத்து  பேரூந்தின் போனட் பகுதிக்குள் ஒளிந்திருந்த அகதி!!

பேரூந்தின் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் 'போனட்' பகுதிக்குள் இளம் அகதி ஒருவன் மறைந்திருந்து பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
கேன்ஸ் நகரில் இருந்து பரிசினூடாக பிரித்தானியா செல்லவிருந்த குறித்த பேரூந்து, நேற்று புதன்கிழமை பரிசின் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள avenue des Nations Unies பகுதியில் தரித்து நின்றது. பின்னர் பிரித்தானியா நோக்கி புறப்பட தயாரான போது, இயந்திரத்தில் வித்தியாசமான சத்தம் ஒன்று எழ, பேரூந்து சாரதி அதன் இயந்திரப்பகுதியை சோதனையிட்டுள்ளார். அப்போது போனட் பகுதிக்குள் அகதி ஒருவர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த அகதியை மீட்டு, Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை