RER B விபத்து - பயணிகளுக்கு நவிகோ அட்டையில் 50 வீத விலைக்கழிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
RER B விபத்து  பயணிகளுக்கு நவிகோ அட்டையில் 50 வீத விலைக்கழிவு!!

கடந்த ஜூன் 12 ஆம் திகதி Gif-sur-Yvette (Essonne) பகுதியில் RER B தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து RER B சேவைகள் அப்பகுதியில் சீராக இயங்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க உள்ளதாக RATP இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 
Saint-Rémy-lès-Chevreuse,
Chevreuse,
Saint Aubin,
Magny-les-Hameaux,
Choisel,
Milon-la-Chapelle,
Saint-Lambert,
Gif-sur-Yvette
 
ஆகிய நகரங்ககில் வசிக்கும் RER B பயனாளர்களுக்கு மாத்திரம் இந்த விலைக்கழிவு வழங்கப்பட உள்ளது. ஜூன் மாத நவிகோ அட்டையின் விலையில் 50 வீதம் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, குறித்த நகரங்களை கடக்கும் RER B ஜூலை மாத நடுப்பகுதியில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விபத்து இடம்பெற்ற நாளில் இருந்து அடுத்த ஆறு நாட்கள் Orsay இல் இருந்து Saint-Rémy-lès-Chevreuse நகரங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும் ஏனைய நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து முழுதாக சீரடைய ஜூலை நடுப்பகுதி வரை காலம் எடுக்கும் எனவும் RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை