குடிபெயர்ந்த பண்டிட்டுகள் கோயிலில் சிறப்பு பூஜை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடிபெயர்ந்த பண்டிட்டுகள் கோயிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் தல்லா முல்லா பகுதியில் உள்ள புனித நீரோட்டத்தின் அடியில், வரலாற்று சிறப்புமிக்க ராக்னயா தேவி கோயில் உள்ளது. இங்கு, 1989-90வது ஆண்டுகளில் நடந்த வன்முறையில், அங்கிருந்து குடிபெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் ஆண்டுதோறும் விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டில், புதுடெல்லியில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் கல்வி, கலாசாரம் மற்றும் விஞ்ஞான சங்கம் சார்பில், யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜம்மு, புதுடெல்லி, மும்பை  உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், தல்லா முல்லா பகுதியில் உள்ள ேகாயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில், இதுபோன்ற யாத்திரை நடப்பது வழக்கம்.

வசந்த காலத்தின் தொடக்கமாக, இம்மாதத்தை பண்டிட்டுகள் பார்க்கின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் அரசு தல்லா முல்லா பகுதிக்கு சென்று வர இலவச பஸ் வசதியை செய்துள்ளது.

இடம்பெயர்ந்த பண்டிட்கள், தாங்கள் மீண்டும் ஏற்கனவே வாழ்ந்த பகுதியில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தர, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை