ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்

புவனேஸ்வர்: ஹாக்கியை தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.   நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால், இதை மத்திய விளையாட்டு துறை முறையாக அறிவிக்கவில்லை.

அரசு இதழிலும் அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. இந்நிலையில், தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வருகிற நவம்பர் மாதத்தில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடக்கிறது. இதற்கான பணிகளை தொடங்கியபோதுதான், தேசிய விளையாட்டாக ஹாக்கியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என தெரியவந்தது.

இது, ஆச்சரியமாகவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் உள்ளது. எனவே, ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஹாக்கியை தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கையை உடனடியாக பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.


.

மூலக்கதை