ஜனாதிபதியின் தீவில் - நீச்சல் குளம் அமைக்க விருப்பப்படும் இம்மானுவல் மக்ரோன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதியின் தீவில்  நீச்சல் குளம் அமைக்க விருப்பப்படும் இம்மானுவல் மக்ரோன்!!

பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுப்பற்கென மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள Brégançon தீவில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நீச்சல் குளம் ஒன்றை கட்டுவற்கு விருப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
1968 ஆம் ஆண்டில் இருந்து இந்த தீவு ஜனாதிபதிகளுக்கு என மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீவினை பயன்படுத்தும் ஜனாதிபதிகள் மிக குறைவு. முன்னதாக பிரான்சுவா ஒலோந்து தனது மனைவியுடன் இங்கு ஒரு நாள் ஓய்வெடுத்திருந்தார். தவிர, கடந்த மாதத்தில் இரண்டு வார இறுதி நாட்களில் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் இங்கு ஓய்வெடுத்திருந்தனர். இந்நிலையில், மக்ரோன் இங்கு நீச்சல் தடாகம் ஒன்றை கட்டுவதற்கு விருபப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் நேற்று புதன்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதேவேளை, இந்த தகவல் பிரபல புலனாய்வு பத்திரிகையான Le Canard chained பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. அவர்கள் வெளியிட்ட தகவலின் படி, 500,000 யூரோக்கள் இந்த நீச்சல் தடாகம் அமைக்க செலவாகும் என குற்றம் சாட்டியுள்ளது.

மூலக்கதை