உலக கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வீழ்த்தியது ஸ்பெயின்(1-0)

தினமலர்  தினமலர்
உலக கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வீழ்த்தியது ஸ்பெயின்(10)

கசான் : உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் ‛பி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஈரான், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்டை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, 54 வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் டியாகோ கோஸ்டா இந்த கோல், வெற்றி கோலாக மாறியது. தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் போஸட்டை முற்றுகையிட்ட போதும், கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூலக்கதை