அமெரிக்காவில் தஞ்சம் இந்தியர்கள் விண்ணப்பம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் தஞ்சம் இந்தியர்கள் விண்ணப்பம்

புதுடில்லி, நம் நாட்டைச் சேர்ந்த, 7,000 பேர், அமெரிக்காவிடம் தஞ்சம் கேட்டு, கடந்த ஆண்டு விண்ணப்பித்ததாக, ஐ.நா., தெரிவித்து உள்ளது.இது குறித்து, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதிலும் இருந்து, 2017 வரை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, ஏழு கோடி பேர், அகதி களாக இடம் பெயர்ந்து உள்ளனர். இதில், 1.62 கோடி பேர், 2017ல் இடம் பெயர்ந்தவர்கள்.இதன்படி, சராசரியாக, 44 ஆயிரத்து, 500 பேர், ஒரு நாளில், அகதிகளாக வேறு நாடுகளுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஒவ்வொரு இரண்டு வினாடிக்கு ஒருவர் அகதியாகிறார்.
மொத்தம், 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அமெரிக்காவில் தஞ்சம் கேட்கும் அகதி களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும், 7,400 பேர், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து தான், தஞ்சம் கேட்டு அதிக அளவிலான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.

மூலக்கதை