La Villette ஆற்றில் இலவச நீச்சல் தடாகம்! - இன்று முதல் திறப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
La Villette ஆற்றில் இலவச நீச்சல் தடாகம்!  இன்று முதல் திறப்பு!!

இன்று புதன்கிழமை ஜூன் 20 ஆம் திகதி முதல், La Villette ஆற்றில் பொதுமக்களுக்காக இலவச நீச்சல் தடாகம் திறக்கப்பட்டுள்ளது. 
 
கோடைகாலத்தை வரவேற்கும் முகமாக கடந்த வருடம் இங்கு நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வருடமும் கோடை காலம் நாளை முதல் (ஜூன் 21) ஆரம்பிக்கின்றதை அடுத்து இம்முறையும் இலவச நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தினமும் இந்த தடாகம் திறக்கப்படும். 16 மீட்டர்கள் அகலமும், 100 மீட்டர்கள் நீளமும் கொண்ட மிக விசாலமான நீச்சல் தடாகம் இது. சிறுவர்களுக்காக 1.6 மீட்டர்கள் ஆழம் கொண்ட தனி தடாகமும் உண்டு. 
நீச்சில் இறங்குவதற்கு முன்னர் குளிப்பதற்குரிய தனி குளியலறையும், கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 ஆம் திகதி வரை இந்த நீச்சல் தடாகம் திறந்திருக்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். 
 
 

மூலக்கதை