59 இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்த நபர்! - செந்தனியில் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
59 இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்த நபர்!  செந்தனியில் கைது!!

59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை யுத்தத்தின் போது கொன்று குவித்த நபர் ஒருவரை 26 வருடங்களின் பின்னர் ஜோந்தாம் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 
 
ஐரோப்பாவின் Bosnia நாட்டில் 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திலேயே குறித்த நபர் இந்த கொடூர செயலை மேற்கொண்டுள்ளார். குறித்த யுத்தத்தில் 100,000 பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். இதில், ஜூன் 14 ஆம் திகதி, 1992 ஆம் ஆண்டு, Radomir Susnjar எனும்  நபர் 59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்துள்ளார். தற்போது 62 வயதாகியுள்ள குறித்த நபர், பல நாடுகளால் தேடப்பட்ட வந்த குற்றவாளியாவார். இவரை யுத்தத்தின் போது, மிகச்சரியாக அடையாளம் காண முடியாமல் இருந்துள்ளது. பல்வேறு தரப்பு விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மனித வன்முறை சட்டத்தின் கீழ், குறித்த நபருக்கு ஆயுள் கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என அறிய முடிகிறது.

மூலக்கதை