அஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை

PARIS TAMIL  PARIS TAMIL
அஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை

  அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த மூன்றாவது படம் விவேகம். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருந்தார்.

 
இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் வசூலும் சுமாராக இருந்தது. இந்நிலையில் இந்தப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. விவேகம், ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது.
 
வெளியான 24 மணிநேரத்தில் விவேகம் படம் 53.48 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்களில் இது ஒரு புதிய சாதனையாகும். முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த சரைனோடு படம் 53.40 லட்சம் பார்வைகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
 
தற்போது அதை விவேகம் முறியடித்திருக்கிறது. காலை 11.30 மணியளவில் விவேகம் படத்தை 85 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 1.04 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
 
விவேகம் படத்திற்கு ஹிந்தியில் கிடைத்த வரவேற்பை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

மூலக்கதை