ஸ்டார்களின் தடுமாற்றம்!

தினகரன்  தினகரன்
ஸ்டார்களின் தடுமாற்றம்!

நடப்பு உலக கோப்பை தொடரில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய முன்னணி அணிகள், தங்களின் முதல் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற  முடியாமல் தடுமாறி உள்ளன. தலைசிறந்த வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர்  (பிரேசில்) போன்றவர்கள் இருந்தும் இந்த அணிகள் முதல் போட்டியில் டிராவுடன் திருப்தி அடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.  ரொனால்டோவாவது ஹாட்ரிக் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். மெஸ்ஸி பெனால்டி கிக் வாய்ப்பையே வீணடித்தது அர்ஜென்டினா ரசிகர்களை ஏமாற்றினார். சுவிஸ் அணிக்கு எதிராக நெய்மரின் பாச்சாவும்  பலிக்கவில்லை. இந்த மூன்று அணிகளுக்கும் டிரா செய்ததால் 1 புள்ளியாவது கிடைத்தது. நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி 0-1 என்ற கோல்  கணக்கில் மெக்சிகோவிடம் பரிதாபமாக மண்ணைக் கவ்வியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை