அங்கேயும் கொசு தொல்லை ஹெலிகாப்டரில் கொசு மருந்து தெளிப்பு

தினகரன்  தினகரன்
அங்கேயும் கொசு தொல்லை ஹெலிகாப்டரில் கொசு மருந்து தெளிப்பு

உலக கோப்பை ஜி பிரிவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் துனிசியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பங்கேற்ற இங்கிலாந்து  வீரர்களுக்கு வோல்கோகிராடில் உள்ள ‘த்ரீ லயன்ஸ்’ ஓட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டலை சுற்றிலும் கொசுக்கள்  படையெடுத்ததால், அவற்றை ஒழிப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓல்கா ஆறு மற்றும் மிதமான தட்பவெப்ப நிலை  காரணமாக வோல்கோகார்டில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் ஆர்க்டிக் கொசுத் தொல்லை அதிகம். இவற்றை விரட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டாலும், மே - ஜூன் மாதத்தில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது. ரசாயன கலவை மூலமாக இந்த பிரச்னையை சமாளித்து வருகின்றனர்.  இந்நிலையில், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெறும்  மைதானத்தை சுற்றிலும் ஹெலிகாப்டர் மூலமாக கொசு மருந்து அடிக்கப்பட்டது.  ‘மைதானத்தில் உள்ள 45,000 இருக்கையிலும் கொசுமருந்து தெளிக்கப்பட வேண்டும் என அரசு முயற்சித்து வருகின்றது. அப்போது தான் ரசிகர்கள்  ஆட்டத்தை தொல்லையின்றி ரசிக்க முடியும்’ என்று வோல்கோகிராட் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை