ஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

டோக்கியோ:  ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். ஜப்பானின் ஒசாகா நகரத்தில்  நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு ஏற்பட்ட  நிலநடுக்கம், 13 கிமீ ஆழத்தில் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.  சில இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி  சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மக்கள் சாலைகளில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்த 9 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார். ஒசாகாவில் சிமென்ட் தூண்  உடைந்து விழுந்ததில் 80 வயது முதியவர் இறந்தார். இபாராகி பகுதியில் புத்தக அலமாரி மேலே விழுந்ததில் 84 வயது முதியவர் இறந்தார். மேலும்,  ஒசாகா, யோகோ மற்றும் கியோடோவில் 40 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் 12க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானங்களின் புறப்பாடு  தாமதமானது. ரயில், புல்லட் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

மூலக்கதை