இந்தியாவில் விளையும் முருங்கைக் கீரையை நீர் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம்: அமெரிக்கப் பல்கலை. அறிக்கை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் விளையும் முருங்கைக் கீரையை நீர் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம்: அமெரிக்கப் பல்கலை. அறிக்கை

வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட இடங்களில் விளையும் முருங்கைக் கீரையை நீர் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கேர்னெகீ மெல்லன் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முருங்கைக் கீரைத்  தூய்மைப் படுத்துவதாக தெரிவித்துள்ளனர். புடோட்டீன்கள் நிறைந்த முருங்கை இலையில் டிஸ்ஸால்வ்ட் ஆர்கானிக் கார்பன் உள்ளதால், அது நீரை தூய்மைப் படுத்த பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரிங்கா ஒலெய்ஃபெரா எனும்வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் முருங்கை இலையை நீரைத் தூய்மைப் படுத்த பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்கு பின் அந்நீரில் மீண்டும் பாக்டீரியா வளரத்தக்கது என்பதால் அது தற்காலிகத் தீர்வு மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை