புதுமுக இயக்குனரின் படத்தில் சமந்தா?

தினமலர்  தினமலர்
புதுமுக இயக்குனரின் படத்தில் சமந்தா?

தற்போது யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. இந்த படத்திற்கு பிறகு அழுத்தமான கதையின் நாயகியாக சினிமாவை தொடரப்போவதாக கூறினார் சமந்தா.

ஆனபோதும், அடுத்தபடியாக அவர் நினைத்தது மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை. அதனால் சில மாதங்களாக எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த சமந்தா, தற்போது அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிஷய்யா என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்க பேசி வருகிறார்.

இந்த படத்தில் நடிக்கும் இளவட்ட நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் சமந்தாவுக்கு கதையின் நாயகி அல்லாத வழக்கமான நாயகி வேடம்தானாம்.

மூலக்கதை