சாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது

தினமலர்  தினமலர்
சாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது

பிரேமம் புகழ் சாய்பல்லவி இப்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். அதோடு, தெலுங்கில் அவர் நடித்த முதல் படமான பிடா படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அந்த படமும் பிரேமம் படத்தைப்போன்று அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்து.

இந்நிலையில், தற்போது பிடா படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, வளரும் நடிகையான எனக்கு இந்த விருது பெரிய உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இன்னும் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.

மூலக்கதை