ஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்

தினமலர்  தினமலர்
ஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்

ஹிந்தியில் துல்கர்சல்மான் நடித்துள்ள முதல் படம் கர்வான். ஆகஸ்டு 3-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஜோயா பேக்டர் என்ற படத்தில் நடிக்கிறார். துல்கருடன், இர்பான்கான், மிதிலா ஆகியோரும் லீடு ரோலில் நடிக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை அபிஷேக் சர்மா முதலில் இயக்கி வந்த நிலையில், தற்போது பர்மனு என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சோனம் கபூரும் நடிக்கிறார்.

படத்தில் துல்கர் சல்மான் கிரிக்கெட் வீரராக நடிக்கிறாராம். கதைப்படி, அவருக்கு முக்கியமான வேடம் என்பதால் இந்த படம் ஹிந்தியில் நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்தி தரும் என்கிறார்கள்.

மூலக்கதை