3 போஸ்டர்களை வெளியிட்டு அசத்திய கண்ணே கலைமானே படக்குழு

FILMI STREET  FILMI STREET
3 போஸ்டர்களை வெளியிட்டு அசத்திய கண்ணே கலைமானே படக்குழு

‘தர்மதுரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, சீனு ராமசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கண்ணே கலைமானே’.

உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமன்னா நாயகியாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகன்ட் லுக், தேர்ட் லுக் என 3 போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

உதயநிதியின் வித்தியாசமான கெட்டப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Udhayanidhis Kanne Kalaimaane 3 look posters goes viral

மூலக்கதை