ஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி

தினமலர்  தினமலர்
ஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான். இவர் தனது கணவருடன் இணைந்து ரெட் சில்லீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல கவுரி கான் ஒரு இன்டீரியர் டெக்கரேட்டரும் கூட. இதற்கென தனி டிசைனிங் ஸ்டுடியோ ஒன்றையும் வைத்திருக்கிறார் கவுரி கான்.

ரன்பீர் கபூர், வருண் தவான் ஆகிய நடிகர்களின் வீடுகளின் உள் அலங்கார வடிவமைப்பு இவரின் கைவண்ணம் தான். தற்போது பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டையும் அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளார் கவுரி கான்.

மூலக்கதை