என் தந்தை அப்படி செய்யமாட்டார் : துல்கர் விளக்கம்

தினமலர்  தினமலர்
என் தந்தை அப்படி செய்யமாட்டார் : துல்கர் விளக்கம்

துல்கர் சல்மான் தற்போது இந்தியில் கர்வான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இந்த போஸ்டரை துல்கரின் தந்தையான நடிகர் மம்முட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதை பார்த்துவிட்டு பலரும் மம்முட்டி தனது மகனின் இந்திப்படத்தை புரமோட் செய்கிறார் என கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள்.

இதை பார்த்த துல்கர், "என் தந்தை என்னையோ, என் படங்களையோ ஒரு போதும் புரமோட் பண்ண விரும்பமாட்டார். அவர் அப்படிப்பட்ட ஆளும் இல்லை. எதுவாக இருந்தாலும் நானாகவே வளர வேண்டும் என நினைப்பவர் அவர்" என மறுப்பு விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை