நடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்திலேயே மண்ணை கவ்விய சோகம் ஜெர்மனியை பிரித்து மேய்ந்த மெக்சிகோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்திலேயே மண்ணை கவ்விய சோகம் ஜெர்மனியை பிரித்து மேய்ந்த மெக்சிகோ

மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டியின் நான்காவது நாளான நேற்று  எப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  ஜெர்மனியும், மெக்சிகோவும் மோதியதில்  10 என நடப்பு சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி கெத்துக் காட்டியுள்ளது மெக்சிகோ. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே மெக்சிகோ வீரர்களின் தடாலடியான ஆட்டம் ஜெர்மனிக்கு திகைப்பூட்டியது.

35வது நிமிடத்தில் மெக்சிகோ  வீரர் ஹிர்விங் லோஜனோ, சக வீரர் கடத்தி தந்த பந்தை ஜெர்மனியின் தடுப்பாட்ட ஆட்டக்காரர்களை ஏமாற்றி நேர்த்தியாக கோலாக்கினார்.   அப்போது அதிர்ச்சியில் உறைந்து போனது ஜெர்மனி. ஆனால் பார்வையாளர்கள் ஹிர்விங் திறமையை கண்டு ஆர்பரித்தனர்.   அதன் பிறகு சிறிது  நேரத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவிற்கு வந்தது.

இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அடுத்து வந்த பிற்பாதி ஆட்டத்தில்  ஜெர்மனி  கோல் அடிக்க பல்வேறு வியூகம் அமைத்தது. ஆனால் அவர்கள் வியூகங்களை தவிடு பொடியாக்கியது  மெக்சிகோ.

ஒரு கட்டத்தில்  வெற்றி பெற முடியாது என்று கணித்த  ஜெர்மனி  ஆட்டத்தை டிரா செய்ய வேண்டும் என பதில் கோல் போட  ஜெர்மனி வீரர்கள்  காற்றாக பறந்தனர். ஆனால் மெச்சிகோவின் வலுவான தடுப்பு வளையத்தை அவர்களால் ஒன்றும் செய்ய  முடியவில்லை.   ஜெர்மனி அணியினர் கோல் அடிக்க 27 ஷாட்களை அடித்தனர் ஆனால் அவர்கள் அடித்த பந்துகளை மெக்சிகோவின்  கோல் கீப்பர் குல்லர்மோ  ஒச்சாவ் தடுத்தும்  திருப்பி அனுப்பியும்  அதிரடி காட்டினார்.

இதனால் கால்பந்து ரசிகைகள்  பதாகைகளில் லவ் சிம்பல் போட்டு முத்தங்களை  காற்றில் பறக்க விட்டனர்.  
ஜெர்மனி வீரர்கள்  பந்தை உதைத்துக் கொண்டு கோல் போட சென்றாலே  அனைத்து மெக்சிகோ வீரர்களும் ஒன்று கூடி விடுவதும், ஒரு வழியாக  அவர்களை கடந்தாலும் அனுபவம் வாய்ந்த மெக்சிகோ கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் அதை உடைத்து நொறுக்குவதும் என ஆட்டத்தின் போக்கு  நகர்ந்தது.

ஜெர்மனியின் நட்சத்திர வீரர் டோனி குரூஸ் அடித்த ஒரு ஷாட் கம்பத்தில் பட்டு வெளியேறியதும் பயங்கர அப்செட் மோடிற்கு சென்று  விட்டார்.    ஜெர்மனி  60 நிமிடங்களாக  பந்தை  அவர்கள்  கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் ஆனாலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை .    ஜெர்மனிக்கு 26 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 9 முறை கோல் பகுதிக்கு பந்தை செலுத்தியது.



8 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது.   ஆனால், கோலடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி தவற விட்டது. ஒரு நடப்பு சாம்பியன் அணி இப்படி சொதப்பியது அனைவருக்கும் அதிர்ச்சியை  உண்டாக்கியது.

ஜெர்மனி அணியின் பலத்தை விட பலவீனங்களை நேற்று உலகத்தின் முன்  காட்டியது அதிச்சி  அளிப்பதாக கால்பந்து விமர்சகர்கள்   கருத்துக்  கூறியுள்ளனர்.

மண்ணை கவ்விய அணிகள்:
1950ல் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஸ்வீடனிடம் 32 என தோல்வி அடைந்தது.

1982ல் அர்ஜென்டீனாவை 10 என பெல்ஜியம் வென்றது.

 1990ல் அர்ஜென்டீனாவுக்கு கேமரூன் அதிர்ச்சி கொடுத்தது.

10 என அது வென்றது.

 2002ல் செனகலிடம் 10 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் தோல்வி அடைந்தது.



2014ல் நடப்பு சாம்பியனாக ஸ்பெயின் 51 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் அடிவாங்கி அசிங்கப்பட்டது.

தற்போது நடப்பு சாம்பியனான ஜெர்மனி 10 என மெக்சிகோவிடம் மண்ணை கவ்வி உள்ளது.

.

மூலக்கதை