இன்றைய ஆட்டத்தில் துனீஷியாவை துவைத்து எடுக்குமா இங்கிலாந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றைய ஆட்டத்தில் துனீஷியாவை துவைத்து எடுக்குமா இங்கிலாந்து

உலகக் கோப்பைக்கான போட்டியில் ஜி பிரிவில் இன்று இரவு 11. 30 மணிக்கு வோல்வோ கிராட்  மைதானத்தில் இங்கிலாந்து  துனீஷியா மோதுகிறது. 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன  இங்கிலாந்து அதன் பிறகு நடந்த  உலகக் கோப்பையில்  இதுவரை விளையாடிய  62 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் கோல் ஏதும் அடிக்கவில்லை.

உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே  இங்கிலாந்து வென்றுள்ளது. 4ல் டிரா, 3ல் தோல்வி அடைந்தது.

இந்த அணியில் கேப்டன் ஹாரி கேன், கடந்த நான்கு பிரீமியர் லீக் சீசன்களில் 105 கோல்கள் அடித்து கலக்கி வருகிறார். இன்று இவரைத்தான் நம்பி  இலங்கிலாந்து களம்  காண்கிறது.



உலகக் கோப்பையில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை  உலகக் கோப்பையில் 1978, 1998, 2002, 2006ல் விளையாடி உள்ளது.

இந்த அணியின் துரதிஷ்டம் ஆடிய அனைத்து   முதல் பிரிவு சுற்று  ஆட்டங்களிலேயே வெளியேறியது.   பயிற்சி ஆட்டங்களில்  இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ள  முக்கிய வீரர்கள் 6 பேர்  காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாபி காஸ்ரியின்  துணிச்சலான வீரர்.   சிறு தவறு என்றாலும்  நடுவருடன் சண்டைக்கு சென்று விடுவது இவரது  பலவீனம்.   மேலும்  இவருக்கும் உடல் நிலை சரியில்லை என்பதால் இன்று இந்த அணிக்கு வெற்றி  என்பது சிரமமாக இருக்கும்.

மற்றபடி  அதையும்  மீறி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றால் பாராட்டலாம்.

.

மூலக்கதை