5 முறை உலக சாம்பியனான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியிடம் திணறல் நெய்மரை கதறவிட்ட குட்டிப் பசங்க

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 முறை உலக சாம்பியனான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியிடம் திணறல் நெய்மரை கதறவிட்ட குட்டிப் பசங்க

மாஸ்கோ:உலக கோப்பை கால்பந்து தொடரில்  நேற்று நடந்த  மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில்சுவிட்சர்லாந்து  அணிகள் மோதின. அழகான குட்டி நாடு என்று கூறப்படும்  சுவிட்சர்லாந்து பிரேசிலுக்கு கடும் சவாலாக இருந்தது.

முன்னாள்  உலக சாம்பியன் ஆன ஒரு அணியை   எப்படியெல்லாம் கோல் போட விடாமல் தடுக்க முடியுமோ அப்படியெல்லாம் தடுத்தது.   தடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, பிரேசிலின்  கோலடிக்கும் வாய்ப்புகளை தடுத்தது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின் ஹோ கோலடிக்க பிரேசில் 10 என முன்னிலை பெற்றது.

முதல் பாதியின் இறுதியில் 10  என்ற கோல் வித்தியாசத்தில் பிரேசில் முன்னிலையில் இருந்தது. ஆனால், அந்த கோலும்  சிறிது நேரத்தில் முறியடிக்கப்பட்டது.



சுவிட்சர்லாந்து  அணியை சேர்ந்த  ஸ்டீவன்  ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். நெய்மர் உள்பட பிரேசில் அணி கடுமையாக  போராடியும் கோலடிக்கும் வாய்ப்பு அதன்பிறகு பிரேசிலுக்கு கிடைக்கவில்லை. பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் இந்த ஆட்டத்தில் பத்தோடு பதினொன்றாகவே இருந்தார்.

மேலும் நெய்மரை  கோலடிக்க விடாமல்  சிறப்பாக தடுத்து வந்தனர்.   அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி  ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எப்படி சொதப்பினாரோ அது போல  நேற்று நெய்மரும் பயங்கர சொதப்பலில் ஆடினார். ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனாக இருந்த பிரேசில் அணி வளர்ந்துவரும் சுவிட்சர்லாந்துக்கு எதிராக வெற்றியடைய முடியாமல் திணறியதை   பார்த்த பிரேசில் அணியின் பரம  ரசிகர்கள்  பயங்கர அப்செட்டில் இருந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் டிரா ஆனது குறித்து கால்பந்து வர்ணனையாளர் ஒருவர் சுவிட்சர்லாந்தின் குட்டிப்  பசங்க நெய்மரை  சுற்றிக் கொண்டு கோல்  அடிக்க விடாமல் ஆக்கிரமித்து  சிறப்பான ஆட்டத்தை  கொடுத்தனர்.

நெய்மர் இது போன்ற ஒரு சிக்கலை சுவிட்சர்லாந்திடம்  எதிர்பார்த்து இருக்க  மாட்டார் என கூறியவர்  மெஸ்ஸியை போல நெய்மரும்  சொதப்பி விட்டார் என்றார்.

.

மூலக்கதை