கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்திய செர்பியா!

PARIS TAMIL  PARIS TAMIL
கோஸ்டா ரிகாவை 10 என வீழ்த்திய செர்பியா!

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்தியது செர்பியா. 
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் 5.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள கோஸ்டா ரிகா - செர்பியா அணிகள் மோதின.
 
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செர்பியாவின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் அந்த அணியின் கோலாரோவ் கோல் அடிக்க செர்பியா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கோஸ்டா ரிகா அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் 1-0 என செர்பியா வெற்றி பெற்றது.
 
கோஸ்டா ரிகாவிற்கு 5 கார்னர் வாய்ப்பும், செர்பியாவிற்கு 4 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு அணிகளும் ஆன்-டார்கெட் நோக்கி மூன்று முறை முயற்சி செய்தனர். ஆனால் செர்பியா ஒரு முயற்சியை கோலாக மாற்றியது. இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றது.

மூலக்கதை