விமானம் போல் ரயில்களில் வேக்யூம் பயோ டாய்லட்

தினகரன்  தினகரன்
விமானம் போல் ரயில்களில் வேக்யூம் பயோ டாய்லட்

புதுடெல்லி:  டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: விமானங்களில் உள்ளது போல் சோதனை முயற்சியாக ரயில்களிலும் மேம்படுத்தப்பட்ட வேக்யூம் பயோ டாய்லட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக, 500 வேக்யூம் பயோ டாய்லட்டுகள் வாங்கப்பட உள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் ஏற்கனவே அமைக்கப்பட்ட 2.5 லட்சம்  கழிவறைகள் வேக்யூம் பயோ டாய்லட்டுக்களாக மாற்றி அமைக்கப்படும். மே மாதம் 31ம் தேதியின்படி 1,36,965 பயோ டாய்லட்டுகள் 37,411 பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பயோ டாய்லட்டின் விலை ரூ.1  லட்சமாகும். 2019ம் ஆண்டு மார்ச்க்குள் 100 சதவீதம் பயோ டாய்லட்டுக்கள் அமைக்கப்படும். இதனால் ரயில் தண்டவாளங்களும் சுத்தமாக இருக்கும்.

மூலக்கதை