ஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி

ஜலலாபாத் : தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில், நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 14 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில், அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக சண்டை நடக்கிறது.ரம்ஜானை முன்னிட்டு, ஆப்கன் அரசு, ஐந்து நாட்கள் போர் நிறுத்தமும், தலிபான் அமைப்பினர், மூன்று நாட்-கள் போர் நிறுத்தமும் அறிவித்திருந்தனர்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று முன்தினம், தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பி-னர், அங்கிருந்த அரசு படையினரை கட்டித் தழுவி, ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று, நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள, கவர்னர் அலுவலகம் அருகே நடந்த தற்கொலைப்-படை தாக்குதலில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 45 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம், நன்கர்ஹர் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்-ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை