தாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது

தினமலர்  தினமலர்
தாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது

பாங்காக் : தாய்லாந்து அரண்மனைக்கு சொந்தமான, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் முழு உரிமை, அந்த நாட்டு மன்னருக்கு வழங்கப்பட்டது.

ஆசிய நாடான தாய்லாந்தில், மன்னர் மஹா வஜ்ஜிரலாங்கோன் தலைமையில், மன்னராட்சி நடக்கிறது. இவ-ரது தந்தையான, மன்னர், பூமிபோல் அதுல்யதேஜ், 70 ஆண்டுகள், தாய்லாந்து மன்னராக இருந்தார். இவர், 2016ல் காலமானார்.

இந்நிலையில், தாய்லாந்து அரண்மனைக்கு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும், மன்னர் சொத்து ஆணையம் என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாகவே இந்த நடைமுறை, பின்பற்றப்பட்டு வருகிறது.

மன்னர் மஹாவஜ்ஜிரலாங்கோன் பதவி ஏற்றது முதல், அரண்மனை நிர்வாகம் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை, தன்வசம் வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தார். இதன் பலனாக, கடந்த ஆண்டு, அரண்மனை சொத்து நிர்வாக சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அரண்மனை சொத்துக்கள் முழுவதையும், நிர்வகிக்கும் பொறுப்பு, தற்போதைய மன்னரான மஹா வஜ்ஜிரலாங்கோன் வசம் ஒப்படைக்கப்பட்டது. 69 ஆண்டுகளுக்குப் பின், இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை