அரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன?

தினமலர்  தினமலர்
அரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன?

புதுடில்லி : பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் அரசு விளம்பரங்கள், மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சுதந்திரமான ஆய்வு நடத்த, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

மத்திய அரசின் துறை வாரியான அறிவிப்புகள், சாதனை விளக்கங்கள், அரசு பொது துறை நிறுவனங்கள் மற்-றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் விளம்பரங்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இவை, டி.ஏ.வி.பி., எனப்படும், விளம்பரங்கள் மற்றும் காட்சி விளம்பரத் துறை என்ற அமைப்பு மூலம் வழங்கப்படுகின்றன.

அரசு விளம்பரங்களுக்காக, 2014 - 15ல், 998 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இது, 2016 - 17ல், 1,286 கோடி ரூபாயாக உயர்ந்தது.லோக்சபா தேர்தல், 2019ல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசு, தங்கள் ஐந்தாண்டு கால சாதனைகளை விளக்க, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வழங்க முயற்சித்து வருகிறது.

எனவே, எதில் விளம்பரங்கள் கொடுத்தால், அது, மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ள அரசு விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இது பற்றி சுதந்திரமான ஆய்வு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், வரும் லோக்சபா தேர்தலில், விளம்பரங்கள் வழங்கப்படும் என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை