இணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு

தினகரன்  தினகரன்
இணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு

சென்னை: இணையதளம் மூலம் ஆர்டர் பெற்று நுகர்வோரின் வீட்டிற்கே  பால் பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டத்தை மேற்கொள்ள ஆவின்  நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஆவின் நிர்வாகம் சார்பில் பால் மற்றும் நெய், மில்க்‌ஷேக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. ஆவின் பொருட்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க கல்வி நிறுவனங்களில் புதிய  ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதைப் போன்று சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட், பல்பொருள்  அங்காடி, கல்வி நிலையங்கள், பால் பொருட்கள் தேவையை எதிர்கொள்ள சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் பாலகங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் ஆவின் ெபாருட்கள் விற்பனை செய்யவும்,  இணையதளங்கள் மூலம்  நுகர்வோரின் வீட்டிற்கே ஆவின் பால் பொருட்கள் கிடைக்கும் வகையிலும், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை  அதிகரிக்கவும், கொல்கத்தாவில் பால்பவுடர் விற்பனை மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆவின்  பொருட்கள் விற்பனையை ேமலும், அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  

மூலக்கதை