தமிழகத்துக்கு தேவையான நிதி வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழகத்துக்கு தேவையான நிதி வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

புதுடெல்லி: விவசாயிகள் வளம்பெற நவீன விற்பனைக் கூடம் அமைக்க கூடுதல் நிதி தேவை என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என நிதி  ஆயோக் கூட்டம் நிறைவு பெற்ற பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து நிதி ஆயோக்  கூட்டத்தில் பேசினேன். மேலும் ராமநாதபுரம், சிவகங்கையில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பல் மருத்துவக் கல்லூரி  அமைக்க கோரியுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். காந்தி கிராம பல்கலையை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தக் கோரிக்கை  வைத்துள்ளேன். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு தேவையான நிதி  வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு தேவையான நிதி கோரியுள்ளோம், காவிரி மேலாண்மை ஆணையம்,  காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறினார். விவசாயிகளுக்கான பல்வேறு  நலத்ததிட்டங்கள் குறித்த கோரிக்கைகள், குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம், தமிழக தேவைகள் குறித்து  பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது என்றும் நிதிஆயோக் கூட்டத்திற்குபின் முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை