காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு

காஷ்மீர்: ரமலான் மாதத்தில் காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடரும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமைதியை விரும்பும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ரமலான்  பண்டிகையை கொண்டாட வேண்டி ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் மற்றும்  ராணுவம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் தலைவர்கள் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில்  ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதி இருப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்பக் கூடாது என்பது பாகிஸ்தானின் விருப்பம் என்றும் மத்திய அரசு  கூறியுள்ளது. பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி கொலை செய்த தீவிரவாதிகளில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  விசாரணை முடிவில்தான் கொலையாளி யார் என்று தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை