உலககோப்பை கால்பந்து : டென்மார்க் வெற்றி

தினமலர்  தினமலர்
உலககோப்பை கால்பந்து : டென்மார்க் வெற்றி

சோச்சி : உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் டென்மார்க் அணி, 1-0 கோல் கணக்கில் பெருவை வென்றது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே, இரு அணி வீரர்களும் தீவரமாக போராடிவந்தநிலையில், இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் யூசுப் போல்சன் கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்றுக்குடுத்தார். கடைசி வரை பெரு அணியால் கோல் போட முடியவில்லை. இதனையடுத்து டென்மார்க் அணி, 1-0 கோல் கணக்கில் பெரு அணியை தோற்கடித்தது.

மூலக்கதை