மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் கைது

தினமலர்  தினமலர்

கோலாலம்பூர், மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்பலர் மசாஜ் மையங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ள அண்டை நாடுகளில் இருந்து ஆள்கடத்தல்காரர்கள் மூலம் இவர்களில் பலர் மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும், அவர் தெரிவித்தார். மேலும் இது போன்ற சட்டவிரோத குடிபுகுதலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை