பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு

தினமலர்  தினமலர்

மக்கசர், இந்தோனேஷிய தீவில், காய்கறி தோட்டத்தில் காணாமல் போன பெண்ணை, ராட்சத மலைப்பாம்பு விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், தெற்காசிய நாடான, இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள கிராமத்து தோட்டத்துக்கு சென்ற, வா டிபா, 54, என்ற பெண், வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள், கிராமவாசிகள் மற்றும் போலீசார், பல இடங்களில் தேடினர்.இறுதியில், மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என, கிராமவாசிகள் சந்தேகித்தனர். மலைக்குன்றின் அடியில் இருந்த, 23 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, அதன் வயிற்றை அறுத்து பார்த்ததில், வா டிபாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில், 20 அடி நீள மலைப் பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக, சிறிய விலங்கினங்களை விழுங்கும் மலைப் பாம்புகள், மனிதர்களை விழுங்குவது அரிது என்பதால், துவக்கத்தில் சந்தேகம் வரவில்லை.தீவில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பில்லை என்ற நிலையில் தான், மலைப் பாம்பு விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக, அப்பகுதி போலீசார் கூறினர்.

மூலக்கதை