உலககோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-ஐஸ்லாந்து போட்டி டிரா

தினமலர்  தினமலர்
உலககோப்பை கால்பந்து: அர்ஜென்டினாஐஸ்லாந்து போட்டி டிரா

மாஸ்கோ:உலகக்கோப்பை கால்பந்து 2018 - அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'டி' பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1--1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ஐஸ்லாந்து அணியின் ஆல்பிரட் பின்பகாசன் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. .இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1--1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தது.ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை