கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்

PARIS TAMIL  PARIS TAMIL
கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்

டெல்லியில் நடந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்திற்கு கவர்னர் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வக்கீல் விபோர் ஆனந்த் என்பவர் நேற்று படேல்நகர் போலீசில் புகார் செய்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், கவர்னரை சட்டப்படி செயல்பட விடாமல் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துவதால், அவர் மீதும், மந்திரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 124–வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், ‘நாங்கள் 4 பேரும் கவர்னர் அலுவலகத்தில் ஒரு சிறிய ஓய்வு அறையில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். கவர்னரின் பணிக்கு நாங்கள் இடையூறாக இல்லை. கவர்னர் தனது முக்கியமான பணிகளை செய்ய மறுக்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் கர்நாடகா, மேற்குவங்காளம், கேரள மற்றும் ஆந்திர முதல்–மந்திரிகள் கெஜ்ரிவாலின் போராட்டம் குறித்து அவரது வீட்டில் உள்ள உறவினர்களிடம் நேற்று விசாரித்து அறிந்து கொண்டனர்.

மூலக்கதை