பப்புவா நியூகினியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்

தினமலர்  தினமலர்

மொரெசுபி துறை, பப்புவா நியூ கினியாவில் கலவரம் வெடித்ததையடுத்து 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஓ-நீல் அறிவித்துள்ளார்.அந்நாட்டின் சதர்ன் ஹைலேண்ட் மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.மாகாண தலைநகரான மென்டியில் ஒரு விமானத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் சில கட்டடங்களுக்கும் தீ வைத்தனர். கலவரம் மேலும் பரவி, நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, மாகாணத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், அதுவரை மாகாண அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் பீட்டர் ஓ-நீல் அறிவித்துள்ளார்.

மூலக்கதை