சந்தையில் தொடர்ந்து முன்னேற்றம் 

விகடன்  விகடன்
சந்தையில் தொடர்ந்து முன்னேற்றம் 

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை ஓரளவு பாஸிட்டிவாகவே இருந்ததால், இன்று சில முக்கிய பங்குகள் முன்னேற்றம் கண்டு, அதன் காரணமாக முக்கிய குறியீடுகள் மீண்டும் லாபத்திலேயே முடிவுற்றன.

இருப்பினும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் மானிட்டரி பாலிசி அறிக்கைகள் வெளிவர இருக்கும் நிலையில், இன்று பங்குகளை வாங்குவதில் ஒரு பெரிய அளவிலான ஈர்ப்பு இல்லாதிருந்தது.

 

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 13.85 புள்ளிகள். அதாவது, 0.13 சதவிகித லாபத்துடன் 10,856.70-ல் முடிந்தது.

டொனால்ட்  ட்ரம்ப் - கிம் ஜாங் உன் கையொப்பத்திற்குப் பின், வர்த்தகர்களின் கவனம் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் மானிட்டரி பாலிசி அறிவிப்பு எதிர்பார்ப்பில் திரும்பியிருப்பதால், ஆசியச் சந்தைகள் பெரும்பாலும் தொய்வடைந்த நிலையிலேயே இருந்தன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், அந்நாட்டின் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வருடத்தில் எத்தனை உயர்த்தல்கள் இருக்கக்கூடும் என்ற அதன் அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

யூரோவின் மதிப்பு குறைந்திருக்கும் நிலையில், ஐரோப்பாவின் முக்கிய சந்தைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்திருப்பதன் காரணமாகவும், ஒரு பெரிய அளவிலான முன்னேற்றம் சந்தையில் காணப்படவில்லை. இருப்பினும், ரூபாயின் சரிவினால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை பங்குகள் விலை உயர்ந்தன.

டெலிகாம் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறையின் பங்குகள் சிறிது சரிவைக் கண்டன. ஏனைய துறைகளைச் சார்ந்த பங்குகள், ஒரு கலப்படமான நிலையில் செயல்பட்டன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாக்டர் ரெட்டி'ஸ் 2.9%
சிப்லா 2.6%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.4%
லூப்பின் 2.1%
ஹின்டால்க்கோ 1.8%
டைட்டன் 1.8%
ஸ்டேட் பேங்க் 1.6%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 1.4%
இன்ஃபோசிஸ் 1.3%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 1.2%
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் 1.1%

விலை இறங்கிய பங்குகள் :

டாடா ஸ்டீல் 2.1%
ஜீ டெலி , பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1 முதல் 1.3 சதவிகிதம் வரை கீழிறங்கின.

இன்று மும்பை பங்குச் சந்தையில், 1297 பங்குகள் விலை உயர்ந்தன. 1380 பங்குகள் நஷ்டத்துடனும் 157 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.

மூலக்கதை