மட்டக்களப்பில் அனல் வெப்பக் காற்றினால் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
மட்டக்களப்பில் அனல் வெப்பக் காற்றினால் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்!

இந்த நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் மரக் கிளைகள் முறிந்து விழுவதும் புழுதி வாரி இறைக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது.
 
இந்த நிலையில் நேற்று வீசிய பலத்த அனல் வெப்பக் காற்றினால் ஓலைக் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
 
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை தமிழ்ப் பிரிவு 10ஆம் குறுக்கில் உள்ள ஓலைக் குடிசைகளே தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வீசிய சூறைக் காற்றினால் குடிசை தீப்பற்றியதாக சபாபதிப்பிள்ளை கோமளம் (வயது 57) தெரிவித்துள்ளார்.
 
இதன்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
 
இதேவேளை, கூலித் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தும் இவருக்கு மூன்று பெண் மக்கள் உள்ளது.
 
இந்த குடிசையில் தான் பல்வேறு வறுமைகளுடன் வாழ்ந்து வந்ததாகவும் சபாபதிப்பிள்ளை கோமளம் கூறியுள்ளார்.

மூலக்கதை